புனர்வாழ்வளிக்கப்பட்ட 950 முன்னாள் போராளிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வின் போதே இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். இந்நிகழ்வில் அமைச்சர்களான டலஸ் அழகபெரும மற்றும் மற்றும் சந்திரசிறி கஜதீர ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
தற்போது வடக்கு மற்றும் மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 9 புனர்வாழ்வு நிலையங்களில் சுமார் 4,000 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்படுகி;ன்ற நிலையில் முதற்முறையாக ஒரே தடவையில் 950 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இளைஞர் விவகார அமைச்சினால் கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்ட இளைஞர்களுக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியொன்று சற்று முன்னார் வவுனியா பொது மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’