வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 ஜூன், 2011

முன்னாள் போராளிகளுக்காக பிரிட்டன் 90 மில்லியன் ரூபா உதவி

ட மாகாணத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் மீள்ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக பிரித்தானிய அரசு சுமார் 90 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் மார்க் கூடிங் அறிவித்துள்ளார்.

இந்த நிதி அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு பணிகளின் ஒரு பகுதியாக குடிவரவுக்கான சர்வதேச ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டமொன்றுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த விஜயத்தின் போது தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையம் மற்றும் தெல்லிப்பளை, கொல்லகலட்டி பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை இவர் சந்தித்ததுடன் யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்தார்.
இதேவேளை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளுக்காக 3,000,000 ஸ்ரேலிங் பவுண்களை வழங்கவுள்ளதாக பிரித்தானிய அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’