வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 ஜூன், 2011

சனல் 4 வீடியோ புலி ஆதரவாளர் நிதியில் தயாரான போலி ஆவணம்: கோட்டாபய

லங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பிரச்சினைக்குள் சிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்கள், மீண்டுமொருமுறை சனல் 4 தொலைக்காட்சியினை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்களை மேற்கோள் காட்டி மேற்படி சனல் 4 தொலைக்காட்சி போலி வீடியோ ஆவணமொன்றினைத் தயாரித்துள்ளது என்று கூறியுள்ள பாதுகாப்பு செயலாளர், இந்த நடவடிக்கை விடுதலைப் புலி ஆதரவாளர்களின் கூற்றுக்கிணங்க அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பணத்தைக் கொண்டு தீட்டப்பட்ட சதித்திட்டமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொதுமக்களைக் காப்பாற்றி அவர்களுக்கு பாதுகாப்பளித்து வந்த இராணுவத்தினர், ஒருபோதும் அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களின் குடும்பங்கள் இன்றும் அரசாங்கத்தின் பாதுகாப்பில் நலமுடன் வாழ்ந்து வருகின்றார்கள். கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, பிள்ளைகள் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் குடும்பம் உள்ளிட்ட 11,000 முன்னாள் போராளிகள் பாதுகாக்கப்பட்டமை அதற்கு சிறந்த உதாரணமாகும்.

அத்துடன், புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் மரணிக்கும் வரையில் அவர்களை இராணுவமும் அரசாங்கமுமே பாதுகாத்து வந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ ஆவணத்தை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’