வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 ஜூன், 2011

'ஹம்பாந்தோட்டை பொதுநலவாய போட்டிகள் திட்டத்திற்கு சனல் 4 ஆவணப்படம் தாக்கத்தை ஏற்படுத்தாது'

லங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 அலைவரிசையினால் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படமானது 2018 ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டையில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் முயற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

"அந்த ஆவணப்படத்திற்கு புலம்பெயர்ந்த மக்கள்தான் பொறுப்பே என்பது தெரிந்த விடயம். அப்படம் உண்மையானதல்ல. அது ஹம்பாந்தோட்டையில் பொதுநலவாய போட்டிகளை நடத்தும் திட்டததிற்கு தாக்கத்தை ஏற்படுத்த மாட்டாது" என அவர் கூறினார்.
தெற்காசியாவுக்கான பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் அலிஸ்டர் பர்ட், சனல் 4 படத்தை பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், 4 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வந்த பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தின் மதிப்பீட்டுக் குழு, இதுவரை பார்த்தவை குறித்து திருப்தி கொண்டுள்ளதாக அமைச்சர் அளுத்கமகே தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’