பி ரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பிய 'இலங்கையின் கொலைக்களம்' எனத் தலைப்பிடப்பட்ட ஆவணப்படத்தை இலங்கை அரசாங்கம் பரிசோதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'இந்த ஆவணப்படத்தை நாம் மிகக் கவனமாக பரிசோதிப்போம். இதற்கு எமது சொந்த தடவியல் நிபுணர்களும் வெளிநாட்டு நிபுணர்களும் உள்ளனர். அதை பரிசோதித்தபின்னர் நாம் பதிலளிப்போம்' என அரசாங்கப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.
அரசாங்கம் இதற்கு எப்படியான பதிலை அளிக்கும் என இப்போது கூறுவது காலத்திற்கு முந்திய செயற்பாடாக அமையும் எனவும் அவர் கூறினார்.
2009 ஆம் ஆண்டிலும் சனல் 4 அலைவரிசை இவ்வாறான வீடியோவொன்றை ஒளிபரப்பியதாகவும் அது போலியானது என நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த வீடியோ போலியானது என தான் ஏற்கெனவே நிரூபித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
அத்துடன் இந்த ஆவணப்படத்தை உள்ளூர் மக்கள் பார்த்தாலும் அது இராணுவத்தின் மனவுறுதியையோ மதிப்பையோ பாதிக்காது.ஏனெனில் அந்த படம் போலியானது என முடிவுசெய்யப்பட்டதொன்றாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
'சர்வதேச ரீதியாக நிச்சயமாக அது இலங்கை மீதான தவறான பார்வையை ஏற்படுத்தும். ஆனாலும் இல்ஙகைப் படைகள் உலகின் மிக ஒழுக்கமான படைகளில் ஒன்றென சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது' என லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார். (

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’