கி ரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக தான் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து மேல் மாகாண சபையில் நாளை அறிக்கையொன்றை விடுக்கவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஹசான் திலகரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 1992ஆம் ஆண்டு முதல் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறுவதாகவும் இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் 83 டெஸ்ட் போட்டிகளிலும் 200 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடிய ஹசான் திலகரட்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஹசான் திலகரட்னவிடம் ஆட்ட நிர்ணய சதி தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடனும் ஊழல் எதிர்ப்பு பாதுகாப்பு குழுவுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை அணியின் மற்றொரு முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’