வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 5 மே, 2011

சிறுமியின் காலைத் தொட்டு பாலியல் தொல்லை செய்ததாக வழக்கு

ட்டக்களப்பு வாழைச்சேனை நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை விசித்திரமான வழக்கொன்று இடம்பெற்றது. 10 வயது சிறுமியின் நாணத்தை கெடுக்கும் விதத்தில் அவரது காலைத் தொட்டு பாலியல் தொல்லை செய்தார் என குற்றம் சுமத்தி ஓட்டமாவடியை சேர்ந்த ஒருவருக்கு எதிராக வழக்கு நடைபெற்றது.

இவ்வழக்கானது வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம். எம். றியால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் முதலாம் சாட்சியான 10 வயதான மேற்படி சிறுமி தனது சாட்சியத்தின்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கு எவ்வித பாலியல் தொந்தரவும் செய்யவில்லை எனவும் தனது வீட்டின் அயலில் வசிக்கும் 3 நபர்களே அவருக்கு எதிராக மேற்படி குற்றச்சாட்டினை கூறுமாறும் தன்னைக் கேட்டுக்கொன்டதாகவும் அவர்களது வேண்டுகோளின்படியே வாழைச்சேனை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து மேற்படி சிறுமியின் சாட்சியமானது நம்பத்தகுந்ததாக உள்ளதாகவும் அதை தகுதிவாய்ந்த சாட்சியமென மன்று திருப்தி அடைந்ததாகவும் தெரிவித்தார். இதனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றத்தை நிரூபிப்பதற்கு வழக்கு தொடுனரான வாழைச்சேனை பொலிஸாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் எதிராளியை விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்தார்
அத்துடன் குறித்த முறைப்பாட்டினை செய்வதற்கு தூண்டுதலாக இருந்த 3 நபர்களையும் உடனடியாக கைதுசெய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை அவர் பணித்தார்.
பொய்யான முறைப்பாடுகளின் பிரகாரம் ஒரு தனிநபரின் மானத்திற்கும் கௌரவத்திற்கும் பங்கம் விளைவிற்கும் என்பதால் வழக்கொன்றினை தாக்கல் செய்வதற்கு முன்னர் வழக்கினை கொண்டு செல்வதற்கு போதிய ஆதாரங்கள் உண்டா என்பதனையும் அதன் உன்மைத்தன்மையையும் ஆராய்ந்த பின்னரே வழக்குத் தொடர வேண்டும் என பொலிஸாரை நீதிபதி அறிவுறுத்தினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’