வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 மே, 2011

கிராமமொன்றின் அபிவிருத்தி என்பது மக்களின் ஒற்றுமையான செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

கி ராமம் ஒன்றின் அபிவிருத்தி என்பது அக்கிராம மக்களின் ஒன்றுபட்ட செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (09) பளைப் பிரதேசத்தின் ஊர்வணிகன்பற்று முகாவில் மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பல கிராமங்களின் மீள்குடியேற்றங்கள் சமகாலத்திலேயே இடம்பெற்றன. ஆனால் இன்று சில கிராமங்கள் விரைவாக மீள் எழுச்சி பெற்றுள்ளன. ஆனால் சில கிராமங்களின் வளர்ச்சி மந்த கதியிலேயே காணப்படுகிறது. இதற்கான மூல காரணத்தை நாம் பல கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டதன் ஊடாக கண்டறிந்துள்ளோம். அதாவது பல கிராமங்களில் மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டதன் ஊடாகவும் கிராமத்தின் வளர்ச்சியில் அதிக அக்கறையோடு கிடைக்கப்பெற்ற வளங்களை சரியாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் சில கிராமங்களில் நிலைமைகள் அவ்வாறில்லை என்றும் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் என்பது பலதரப்பினருடன் தொடர்புபட்டது. ஒரு கிராமம் மீள்குடியேறியதைத் தொடர்ந்து அங்கு அரச அதிகாரிகள் தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் வருகை தருகின்றனர். இவர்களுடன் மக்கள் ஒருமைப்பாட்டுடன் அணுகி தமது தேவைகளை கேட்டுப்பெற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் ஒற்றுமையுணர்வே அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் ஏனைய உதவி வழங்கும் நிறுவனங்களினதும் செயற்பாட்டு ஆர்வத்தை மேலும் தூண்டுவதாக அமையும். எனவே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை தவறவிடாது சரியான முறையில் பயன்படுத்தி உங்களது கிராமங்களை அபிவிருத்தியை துரிதப்படுத்தவேண்டும் என்றும் சந்திரகுமார் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பளைப் பிரதேச செயலர் முகுந்தன் கிராம உத்தியோகத்தர் சுதர்சன் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’