வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 25 மே, 2011

ராஜீவ் படுகொலையை அரசியலாக்க வேண்டாம்: ஜெவுக்கு காங்கிரஸ் கண்டனம்

மு ன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, ராஜீவ் காந்தி கொலையில் திமுகவை தொடர்புபடுத்தி கருத்துத் தெரிவித்தார்.
திராவிட இயக்க கொள்கைதான் ராஜீவ் கொலைக்கு காரணமாக இருந்ததாக பத்மநாபன் கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, ராஜீவ் காந்தி கொலையில் திமுகவுக்கு மறைமுகமாக பங்கு உண்டு என்பதுதான் பொதுவான குற்றச்சாட்டு என்றார்.

ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, ராஜீவ் காந்தி கொலை மிகவும் கொடூரமான, உணர்வுப்பூர்வமான நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
மிகவும் உணர்ச்சிகரமான அந்த துயரச் சம்பவத்தை யாரும் அரசியலாக்க முயற்சிக்க வேண்டாம். இதனை யாரும் அரசியலாக்க முயற்சிப்பதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. இவ்வளவு பெயரி துயரச் சம்பவத்தை அரசியலாக்க முயற்சிப்பது கண்டனத்துக்குறியது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவம் அரசியலாக்கப்படுவதில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’