பா கிஸ்தானின் கராச்சி நகரில் கடற்படைத் தளம் ஒன்றிற்குள் அதிரடியாக நுழைந்து பெரும் சேதம் உண்டு பண்ணிய தாலிபன் ஆயுததாரிகளிடம் இருந்து நெடுநேர கடும் சண்டைக்குப் பின்னர் பாதுகாப்பு படையினர் அத்தளத்தின் கட்டுப்பாட்டை மீட்டுள்ளனர்.
மெஹ்ரான் என்ற கடற்படை விமான தளத்திற்குள் ஞாயிறு இரவு அதிரடியாக நுழைந்த துப்பாக்கிதாரிகள் அங்கே ஓடுதளத்தில் நின்றிருந்த விமானங்களை முதலில் தாக்கியிருந்தனர். விமானப் பணிமனைகளில் இருந்த கருவிகளையும் அவர்கள் சேதப்படுத்திருந்தனர். ரொக்கெட் குண்டுகளை வீசி பல யுத்த விமானங்களை அவர்கள் சேதப்படுத்தியும் அழித்தும் இருந்ததாக சம்பவங்களை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கவல்ல பி3சி ஓரியன் என்ற குண்டுவீச்சு விமானங்கள் குறைந்தபட்சம் இரண்டும் இத்தாக்குதலில் தீக்கிரையாகியுள்ளன. அமெரிக்க தாயாரிப்பான இவ்விமானங்கள் பல மில்லியன் டாலர்கள் பெருமதி கொண்டவை.
அந்த விமானதளத்தின் மையப்பகுதியில் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு நடத்தி கடற்படையைச் சேர்ந்த 10 பேரை ஆயுததாரிகள் கொன்றுகுவித்துள்ளனர்.
பின்னர் கடற்படைக் கமாண்டோக்களும், மரைன்ஸ் படையினருமாக ஆயுததாரிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பக்க பலமாக வெளியிலிருந்து ஆயுதமேந்திய படையினர் டஜன் கணக்கில் வந்து சேர்ந்திருந்தனர். பனிரெண்டு மணி நேர கடும் சண்டைக்குப் பின்னர் விமான தளத்தின் பெரும்பகுதி இடங்களில் இராணுவத்தினர் கட்டுப்பாட்டை மீட்டதுடன், ஆயுததாரிகள் சிலரையும் கொன்றுள்ளனர்.
எஞ்சிய துப்பாக்கிதாரிகள் கடற்படை அதிகாரிகள் பலரை அத்தளத்திலேயே ஒரு கட்டிடத்துக்குள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்தனர். சீன இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டிருந்தார்.
அப்பணயக் கைதிகளை விடுவிக்க கமாண்டோக்கள் அனுப்பப்பட்டிருந்தனர். கடைசியாக பணயக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஒசாமா பின் லாடனின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக இத்தாக்குதலை தாமே நடத்தியதாக பாகிஸ்தானிய தாலிபான்கள் உரிமை கோரியிருந்தனர்.
சங்கடம்
கராச்சியில் உள்ள கடற்படை நிலையங்கள் கடந்த ஒரு மாதத்தில் தாக்குதலுக்குள்ளாவது இது மூன்றாவது தடவை.
2009 பிற்பகுதியில் பாகிஸ்தானின் இராணுவத் தலைமையகம் ஆயுததாரிகளால் முற்றுகையிடப்பட்ட சம்பவத்தின் பின்னர் அந்நாட்டில் நடக்கும் மிக மோசமான துணிகரம் இதுதான்.
பாதுகாப்பு மிக்க இராணுவ தளத்தில் சில ஆயுததாரிகளால் இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ண முடிந்திருப்பது, பாகிஸ்தானின் இராணுவத்துக்கு பெரிய தர்மசங்கடத்தை தோற்றுவித்துள்ளது.
அந்நாட்டின் அணுகுண்டுகள், அணு உலைகள் போன்றவை எந்த அளவுக்கு பாதுகாப்பானவை என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’