வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 மே, 2011

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பான் கீ மூன் ஆராய்கிறார்

ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பான நிபுணர் குழு அறிக்;கை குறித்து அடுத்த கட்டமாக தான் எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக ஐ.நா. பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் எமது நிபுணர் குழு அறிக்கை குறித்து கவனமாக ஆராய்ந்த பின் கருத்துக் கூறுவதாக அறிவித்துள்ளது. அது எமக்கு கிடைக்கும்போது நாம் அதனை பார்வையிடுவோம். இதுவே எமது நிலைப்பாடு என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பார்ஹான் ஹக் நியூயோர்க்கில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கூறினார்.
இலங்கையின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் நிபுணர் குழு அறிக்கை குறித்து அரசாங்கம் கருத்து எதனையும் தெரிவிக்காது. ஏனெனில் இந்த அறிக்கை சட்டவலு கொண்டதல்லவெனவும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். (DM)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’