நு வரெலியா - பதுளை வீதியிலுள்ள உல்லாச விடுதியொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். அப்பெண்ணின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட பெண் பயாகலையை சேர்ந்த கருணாமுனி சிரானி (வயது 31) என அவரின் அடையாள அட்டை மூலம் தெரியவந்துள்ளது.
அவர் இளைஞர் ஒருவருடன் மேற்படி விடுதியில் தங்கியிருந்தாகவும் அந்த இளைஞர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற நுவரெலிய மாவட்ட பதில் நீதவான் சிவன்ஜோதி யோகராஜா பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டதோடு பெண்ணின் சடலத்தை உறவினர்கள் வந்தால் கையளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
தலைமறைவாகிய இளைஞன் தொடர்பாக குறித்த விடுதியில் எந்தவிதமான தகவல்களும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக கூறப்படுவதாவது:
கடந்த 24ஆம் திகதி நபர் ஒருவர் குறித்த உல்லாச விடுதிக்கு வருகை தந்து அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.
மாலையில் தனது மனைவி வருவதாகவும் அவரை அழைத்து கொண்டு வருவதாக கூறி வெளியில் சென்று, பின்னர் ஒரு பெண்ணை அழைத்து வந்து தங்கியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக இருவரும் வெளியில் சென்று வந்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை உல்லாச விடுதியில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மேற்படி அறையை திறந்து பார்த்தபொழுது குறித்த பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார்.
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பெண்ணிடம் இருந்த தேசிய அடையாள அட்டையின் மூலமாகவே அவர் தொடர்பான தகவல் பெறப்பட்டுள்ளது. இவருடன் இருந்த நபர் தலைமறைவாகிய நிலையில் அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காமினி மத்துரட்டவின் பணிப்புரையின் பேரில் நுவரெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் ரணவீர மேற்கொண்டு வருகின்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’