வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 மே, 2011

புத்த பெருமானின் போதனையை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும்: ஜனாதிபதி

எம் எதிரே வருகின்ற அனைத்து சவால்களின் போதும் புத்த பெருமானாரின் போதனையை முன்மாதிரியாக உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பூரண அரச அனுசரணையுடன் 2600 ஆவது புத்த ஜயந்தி வெசாக் மகோற்சவத்தை பக்திபூர்வமாக கொண்டாடுகின்றோம். புத்த போதனை இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளாக அனைத்து மக்கள் சமுதாயத்துக்கும் சரியான பாதையைக் காட்டியுள்ளது. உலக வாழ் மக்கள் அனைவரும் அதன் மூலம் எல்லையில்லாத மன நிம்மதியைப் பெற்றிருந்தனர். அந்த உயரிய தர்மத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாதுகாத்துக் கொண்டதன் காரணமாகவும் அது தர்மத்தின் பிரகாரம் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திக் கொண்டதன் காரணமாகவும் எமது தாயகம் உலகத்தின் கௌரவத்திற்கும் மகத்துவத்திற்கும் பாத்திரமாகின்றது.
நாட்டிற்கு கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்திய போதும் தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்கின்ற போதும் புத்த பெருமானார் காட்டித் தந்த நால்வகை பாதகங்கள் அற்ற பாதையையும், தர்மத்தை முதன்மையாகக் கொண்ட அரச கொள்கையையும் நாம் பின்பற்றினோம்.
""குரோதத்தை அன்பினால் வெற்றி கொள்ள வேண்டும். தீமையை நன்மையால் வெற்றி கொள்ள வேண்டும். உலோபியை வள்ளல் தன்மையாலும் பொய் சொல்பவனை சத்தியத்தாலும் வெற்றி கொள்ள வேண்டும்'' என புத்த பெருமானாரின் போதனையில் குறிப்பிடப்படுகின்றது. நம் எதிரே வருகின்ற அனைத்து சவால்களின் போதும் மேற்கூறப்பட்ட உயரிய அறநெறியினால் போஷிக்கப்பட்ட முன் மாதிரியை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும்.
ஆசையின் காரணமாக உலகத்தில் தோன்றிய அனைத்து முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டு நல் வழியில் கருணையைப் பரப்புகின்ற பாதையை நாம் திறந்து வைக்க வேண்டும். தணிந்த அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கு அறநெறி வழியை நாம் காட்ட வேண்டும்.
நமது புத்த பெருமானின் இறுதிப் போதனையின் பிரகாரம் அவர் கொள்கைகளைப் பூஜிப்பதற்கு முதலிடம் கொடுத்து தாமதமின்றி நன்மைகளையும் அறத்தையும் சேகரித்து புத்த ஜயந்தி வெசாக் மங்கள உற்சவத்தை அர்த்தமுள்ளதாக்கி புத்த பெருமானை சரணம் அடைய உறுதி பூணுவோமாக.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’