வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 மே, 2011

கோழைகளின் கைங்கரியமே இன்று அரங்கேறியது: பிரதியமைச்சர் முரளிதரன்

னது இணைப்பாளர்களில் ஒருவராகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய நபராகவும் செயற்பட்ட இராசமாணிக்கம் மதியழகளின் கொலையினை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதனை கோழைகளின் கைங்கரியமாகவே எண்ணத் தோன்றுகிறது' என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் - தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் கோயில் பரிபாலனசபை செயலாளர் இராசமாணிக்கம் மதியழகளின் கொலை தொடர்பாக பிரதியமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்:
''மட்டக்களப்பு மாவட்டம் நீண்டகாலமாக அமைதியாக இருந்து வந்தது. அந்த அமைதியினை கெடுக்கும் வகையிலேயே இன்றைய கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொலைசெய்யப்பட்ட மதியழகன் ஏற்கனவே பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் உலாவிய ஒருவர். அப்படிபட்ட ஒருவரை கொலை செய்வதென்பது கோழைத்தனமானது. பொதுசேவைகளின் தன்னை அர்ப்பணித்து மிக நீண்டகாலமாக சேவை செய்து வந்த மதியழகளின் கொலை கண்டிக்கத்தக்கது.
இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் கேட்டிருக்கிறோம். பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டில் அமைதியான சூழல், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான சூழல் நிலவுகின்ற நிலையில் அதனை குழப்புவதற்கு முயற்சிக்கும் விசமிகளின் இக் கோழைத்தனமான செயலினை வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறான சம்பவங்கள் மேலும் நடைபெறாது தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்'' எனவும் பிரதியமைச்சர் முரளிதரன் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’