கு வைத்தின் குவாரெய்ன் நகரில் பணியாற்றிய இலங்கைப் பணிப்பெண் ஒருவரும் அவருக்குப் பிறந்த சிசுவொன்றும் அவர் பணியாற்றிய எஜமானரின் வீட்டில் இறந்துள்ளதாக அராப் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்நாட்டு உள்துறை அமைச்சின் செயற்பாட்டுப் பிரிவுக்கு மேற்படி எஜமானரிடமிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் அவசர மருத்துவ சேவைக் குழுவினரும் அந்த வீட்டிற்கு விரைந்தனர். எனினும் அவர்கள் அங்கு செல்வத்றகு முன் பணிப்பெண்ணும் அவரின் சிசுவும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரசவத்தின்போது அப்பணிப்பெண் கஷ்டங்களை அனுபவித்ததாகவும் வீட்டில் மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் இருவரும் இறந்துவிட்டதாகவும் மேற்படி எஜமானர் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார். சடலங்கள் தடயவியல் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இம்மரணங்களுக்கான உண்யைமான காரணம் என்னவென்பது குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’