புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இவ்வாறானவர்கள் இங்கு வந் து நாட்டின் உண்மையான சமாதான நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமென கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் 60 ஆம் ஆண்டு அகவை நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
உங்கள் தாய்நாட்டை மறக்க வேண்டாம். நாம் தாய்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டுமென சிந்தியுங்கள் என்றும் ஜனாதிபதி தமிழில் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து தமிழில் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது, நான் தமிழில் பேச விரும்புகிறேன். நீங்கள் சிரிக்காவிட்டால் தொடர்ந்து நான் பேசுவேன்.
இந்நாட்டிலுள்ள முக்கிய தமிழ் பாடசாலையொன்றின் வைர விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பாக்கியவான்கள். வடக்கு கிழக்கிற்கு பின்னர் முதலாவது தமிழ் இந்து பாடசாலை இதுவாகும்.
அன்று பிள்ளையார் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று பிள்ளையார் துணையோடு இந்துப் பாடசாலையாக மாறியிருக்கின்றது. இதற்காக பாடுபட்டவர்களை நாம் நினைவு கூர வேண்டும். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், சேர் பொன். இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் ஆகியோர் இந்நாட்டுக்கு செய்த சேவைகள் அளப்பரியனவாகும்.
எனவே நீங்கள் ஒரு நாளும் நன்றி மறக்க வேண்டாம். உலகில் களவாட முடியாத ஒன்று உள்ளது. அதுதான் கல்வி. படித்தால் மட்டும் போதாது, ஒழுக்கமும் பண்பும் இருக்க வேண்டும். இது போன்று நாட்டிலும் சர்வதேசத்திலும் எமது பிள்ளைகள் நற்பெயர் எடுக்க வேண்டும்.
மாதா, பிதா, குரு தெய்வம் இவர்களை மறக்க வேண்டாம். உங்கள் தாய்நாட்டை மறக்க வேண்டாம். நாம் தாய் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டுமென்று சிந்தியுங்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையை பற்றி பொய்யான பிழையான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இவர்கள் இந்நாட்டுக்கு வந்து உண்மையான சமாதான நிலைமையை கண்டு கொள்ள வேண்டும். அதற்காக அழைப்பு விடுக்கின்றேன்.
அத்தோடு இங்கு பிறக்காதவர்களும் இங்கு ஒருபோதும் வராதவர்களும் பிழையான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். இங்கிருப்பது ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி, இப்பாடசாலை மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் என தமிழில் உரையாற்றி முடித்தார் ஜனாதிபதி.
இங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மொழியில் தனது உரையை நிகழ்த்துகையில்,
நாட்டில் பயங்கரவாதம் இருந்தபோதும் கோயில்களில், பள்ளிவாசல்களில் தேவாலங்களில், மத அனுஷ்டானங்களை நடத்த முடியாத காலம் காணப்பட்டது. இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அனைத்து மத நடவடிக்கைகளும் அச்சம் இன்றி முன்னெடுக்கப்படுகின்றன.
வேல் திருவிழா உட்பட அனைத்தும் விமர்சையாக நடைபெறுகின்றன. வரலாற்றில் நிகழ்ந்த பிழைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூராத எமது பிள்ளைகளின் மனதில் குரோதத்தையும் வைராக்கியத்தையும் ஏற்படுத்த முனையக் கூடாது. பெற்றோர்கள் பெரியவர்கள் இதனை உணர வேண்டும்.
எதிர்கால சந்ததியினரான எமது பிள்ளைகளின் மனதில் குரோதத்தை வளர்க்கக் கூடாது.
அன்பு, அஹிம்சை, கருணை உள்ளம் கொண்ட எதிர்காலச் சந்ததியினரை உருவாக்க நாம் திடசங்கற்பம் கொள்வோம்.
தமிழ் மக்களுக்கு பிள்ளையார் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நாமும்பரீட்சையின்போது பிள்ளையாரின் உதவியையே நாடுவோம். எனவே இந்துக்களுக்கும் எமக்கும் இடையே ஒற்றுமை உண்டு. அதனை பேணுவோம்.
நாட்டில் இன, மத, பேதமற்ற ஒற்றுமையுள்ள சமூகத்தை உருவாக்குவோம் என்றார். ஜனாதிபதி பாடசாலை புதிய கட்டிடத்துக்கான நுழைவாயிலையும் திறந்து வைத்தார்.
இங்கு உரையாற்றுகையில் இந்துக் கல்லூரி அதிபர் ரி. முத்துக்குமாரசுவாமி,
இப்பாடசாலையில் படித்த மாணவர்கள் உள்நாட்டு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்று உயர் நிலையில் இருக்கின்றனர். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று இப்பாடசாலையல் 4000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 152 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.
க.பொ.த. (சா/தரம்) மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் எம் மாணவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பௌசி நல்லை ஆதீனம், சம்மாங்கோட்டு பிள்ளையார் ஆலய பிரதம குரு ராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன், பாராளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, பிரபõஷ் கணேஷன், விஜயகலா மகேஸ்வரன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’