அ ரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் செனட் சபை திட்டமானது தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்படுகின்ற அதிகாரப் பகிர்வுக்கு ஈடானதாகவோ அல்லது ஏற்புடையதாகவோ அமையாது என்பதை அரச தரப்புக்கு தெளிவுபடக் கூறிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆறாவது சுற்றுப் பேச்சுக்களின் போது அதிகாரப் பகிர்வு விடயத்துக்கு முக்கியத்துவமளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதிலும் அரசாங்கம் தனது கூட்டணிக் கட்சிகளுடன் இது குறித்து பேச்சுக்கள் முடிவடையவில்லையெனக் கூறி அந்த அறிவிப்பை தள்ளுபடி செய்ததாகக் குறிப்பிட்ட கூட்டமைப்பு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு உறுதிமொழியும் இன்றுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டியிருப்பதாகவும் கூறியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது. இது தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரும யாழ். மாவட்ட எம்.பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் இம்முறை அதிகõரப் பகிர்வு குறித்து பேசுவது என்றே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் ஆளும் கட்சி தனது அங்கத்துவக் கட்சிகளுடனான பேச்சுக்கள் நிறைவடையவில்லையென்றும் அந்தப் பேச்சுக்கள் நிறைவடைந்ததன் பின்னரே அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச முடியும் என்று அரச தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் பாராளுமன்றத்துக்கு அடுத்ததான செனட் சபை ஒன்றை அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்த செனட் சபைத் திட்டமானது அரசியல் தீர்வுக்கு பதிலீடாக அமையாது. தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற வகையிலான அதிகாரப் பகிர்வே அவசியமாகும்.
ஆகவே தமிழர்களின் எதிர்பார்ப்புகளின் பிரகாரம் செனட் சபை அரசியல் தீர்வுக்கு ஏற்புடைய திட்டமாக அமையப் போவதில்லையென்பதை தெளிவாக கூறியிருக்கின்றோம். இது இவ்வாறிருக்க அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. அரசியல் கைதிகளாக 628 பேர் இருக்கின்றனர். இவர்களது பெயர் விபரங்களை அரச தரப்பிடம் கையளித்திருக்கின்றோம். இந்த கைதிகளை விடுதலை செய்வதற்கு மூன்று கிழமைக்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால் 5 வாரங்களõகியும் அது நடைபெறவில்லை. மேலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களது விபரங்களை அறிவிப்பதாகக் கூறியிருந்தது. அதுவும் இதுவரையில் நடைபெறவில்லை.
இது இவ்வாறிருக்க அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி வருகின்ற ஏக காலத்திலேயே தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஆளும் கட்சி அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள் ஆகியேõரின் கூட்டுடன் இராணுவமும் இணைந்து கொண்டே இந்த நில அபகரிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை, வவுனியா, மன்னார் மற்றும் மடு ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு தமிழர் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் இந்த காணி அபகரிப்பு விடயங்கள் குறித்து அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாது என்றே கூறப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்துவதாக உத்தரவõதம் அளிக்கப்பட்டது.
இதேவேளை, ஒருபுறத்தில் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தமிழர்களுக்கு அநீதிகளை இழைத்து அவர்களது நிலங்களையும் சொத்துக்களையும் அபகரிப்பதென்றால் பேச்சுக்களை தொடர்வதில் அர்த்தம் இருக்காது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியிருக்கின்றோம் என்றார். __

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’