வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 28 மே, 2011

கொல்லப்பட்ட இலங்கை பெண்ணின் குடும்பத்திற்கு 40000 றியால் 'இரத்த இழப்பீடு'

F சவூதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் குடும்பத்திற்கு அப்பணிப் பெண்ணின் அனுசரணையாளரின் மனைவி 40,000 சவூதி றியால்களை (சுமார் 11 லட்சம் ரூபா) 'இரத்த இழப்பீடாக' வழங்கியுள்ளதாக இலங்கைத் தூதரகம் அராப் நியூஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளது.

36 வயதான புஷ்பவள்ளி செல்லதுரை எனும் இப்பணிப்பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதையடுத்த அனுசரணையாளரின் மனைவி சவூதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்னும் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். தற்போது நஷ்ட ஈடு வழங்கப்பட்டதையடுத்து அவர் அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குற்றம் சுமத்தப்பட்ட தரப்பிடமிருந்து நாம் பெறக்கூடிய சிறந்த தொகை இதுவென இலங்கை ராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.
இவ்வார முற்பகுதியில் அபா நகரிலுள்ள சவூதி பெண் ஒருவர் தனது சவூதி கணவரை கொலை செய்தமைக்காக அவரின் உறவினர்களுக்கு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 110,000 சவூதி றியால்களை வழங்கியதாக செய்திகள் வெளியாகின.
இதேவேளை புஷ்பவள்ளியின் சகோதரர் சரோஜா செல்லதுரை அராப் நியூஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், சவூதி அரேபியாவில் தனது சகோதரிக்கு நடந்தது மற்றொரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது எனக் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’