வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 2 மே, 2011

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 21,507 முறைப்பாடுகள்

சி றுவர் துஷ்பிரயோகம் குறித்து அறிவிப்பதற்கான 1929 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலம் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை பொதுமக்களிடமிருந்து 21,507 முறைப்பாடுகள் தேசிய சிறுவார் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்திருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் இந்த தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதேவேளை பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்தபோதிலும் அவற்றில் 4323 புகார்கள் மாத்திரமே உண்மையானவை என அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலிருந்தே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். இம்மாவட்டங்கள் அடர்த்தியான சனத் தொகையைக் கொண்டிருப்பதே அங்கிருந்து அதிக முறைப்பாடுகள் கிடைப்பதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.
சிறார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அப்பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்காக குழுவொன்றை அமைப்பது குறித்தும் கலந்துரையாடுவதற்காக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் அண்மையில் சந்தித்ததாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய தரவுதளமொன்றை அமைப்பதே இக்குழுவின் பிரதான நோக்கம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’