வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

நல்ல மனிதர் சிறந்த செயற்பாட்டாளர் அமரர் நாகராசா கோணேஸ்வரன்! அமைச்சர் அவர்களின் இறுதி அஞ்சலி

ற்பண்பும் நேர்மையான பணியும் எந்நேரமும் சுறுசுறுப்புடன் செயற்படுகின்ற ஆற்றலும் கொண்டிருந்த நாகராசா கோணேஸ்வரன் அவர்களது மறைவு தொடர்பிலான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது.

உண்மையிலேயே அவர் ஒரு நல்ல மனிதராக வாழ்ந்து வந்தவர். கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு அபிவிருத்தி இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கல்வி மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சின் அமைச்சராக நான் செயற்பட்ட 2004ம் வருட கால கட்டத்தில் அந்த அமைச்சின் கீழ் இருந்த வாழ்க்கைத் தொழிற் பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்ற வந்ததிலிருந்து கடந்த வருட நடுப்பகுதி வரை அவர் எனது அமைச்சின் கீழ் அதே பதவியில் செயற்பட்டு வந்துள்ளார்.

இக்கால கட்டத்தில் அவர் தனது பதவியை வெறும் கடமையாக மாத்திரம் கருதாமல் அதை எமது சமுதாயத்திற்கு ஆற்றுகின்ற பணியாகவும் கருதி உழைத்து வந்ததை நானிங்கு நினைவு கூறுவதில் பெருமிதமடைகின்றேன்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு தொழிற் பயிற்சி நிலையங்களை உருவாக்கி அதன் மூலம் பலருக்கு நல்ல பயன்களைப் பெற நான் வாய்ப்பளித்திருந்த போது எனது அந்தப் பணிகளுக்கு உறுதுணையாக நின்று சிறப்பான பங்களிப்புக்களை அவர் வழங்கி இருந்தார்.

2009ம் வருடம் வன்னிப் பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்து வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த போது அம்மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியதுடன் மாற்று வலுவுடையவர்கள் வயோதிபர்கள் போன்றவர்களை அந்நிலையங்களில் இருந்து அப்புறப்படுத்தி அவர்களைத் தனியாக வைத்து பராமரித்து வந்த எனது நடவடிக்கைகளுக்கும் இவர் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கி முன்னின்று உழைத்திருந்தார்.

அதன் பின்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக அவர் நியமனம் பெற்றிருந்தார். இக்கால கட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எமது கட்சியின் நிர்வாகத்தில் இருந்து வந்தது. மக்கள் இடம்பெயர்ந்துள்ள இப்பகுதியில் அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதற்கான பல்வேறு உதவிகளை இக்கால கட்டத்தில் அவர் மேற்கொண்டிருந்ததை நான் நன்கறிவேன்.

இந்நிலையில்தான் அன்னார் கடந்த 10ம் திகதி இயற்கை எய்தி இருக்கின்றார்.

கீரிமலையில் பிறந்த அமரர் நாகராசா கோணேஸ்வரன் அவர்கள் ஆசிரியராக முகாமைத்துவ எழுது வினைஞராக திணைக்களப் பணிப்பாளராக பிரதேச செயலாளராக பல்வேறு பதவிகளில் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளதுடன் அளவெட்டியில் கோணேஸ் மெக்ஸ் அக்கடமி எனும் கல்வி நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் தனது சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தி இருப்பவர்.

குறுகிய காலமே இம்மண்ணில் வாழ்ந்துள்ள அன்னாரது மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும் என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் நண்பர்கள் சக பணியாளர்கள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உட்பட அனைவருடனும் நானும் எனது கட்சியினரும் எனது அமைச்சின் ஏனைய அதிகாரிகளும் பணியாளர்களும் ஆழ்ந்த துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’