ப ல தசாப்தங்களாக தொடர்ந்த விடுதலைப்புலிகளுடனான போருக்கு இலங்கை அரசாங்கம் முடிவு கண்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் ஒருமுறுகல் நிலைக்கான சமிக்ஞைகள் தொடருகின்றன.
இலங்கையில் மனித உரிமை மற்றும் நல்லிணக்க நிலவரங்களில் ஒரு உறுதியான முன்னேற்றம் காணப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்களில் ஒரு மட்டுப்பாடு தேவைப்படும் என்று அமெரிக்க அரசுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களை கவலைக்குரியவை என்று அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின், வெளிவிவகாரக் குழுவின் முன்பாக விபரித்த அமெரிக்க அரசுத்துறையின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் றொபேர்ட் பிளேக் அவர்கள், அமெரிக்காவுக்கு அது குறித்து மிகுந்த கரிசனை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சில விசயங்கள் மிகவும் மோசமாக மாறிவருவதாகக் கூறிய அவர், ஜனநாயக நிறுவனங்கள் அங்கு பலவீனமடைந்து செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டுப் போரை இலங்கை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்த விதமானது, அந்த அரசாங்கத்துடன் முழுமையாக ஈடுபாட்டுடன் இணைந்து செயற்படுவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் கொல்லப்பட்டமை போன்றவை உட்பட சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் அங்கு மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பொறுப்பேற்றல் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் அளவு குறுகியமை, தமிழர்கள் சிலரை பொலிஸ் படையில் சேர்த்தமை போன்றவை உட்பட நல்லிணக்கம் தொடர்பில் சில நல்ல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அது தொடர்பில் இன்னமும் நிறையச் செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த இராஜதந்திர அதிகாரியான பிளேக் அவர்கள் கடந்த வாரம் உலகத் தமிழர் பேரவை என்னும் புலம்பெயர் தமிழர் குழு ஒன்றை சந்தித்திருந்தார்.
விடுதலைப்புலிகளைப் போன்று உலகத் தமிழர் பேரவையினரும், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திர நாடு தேவை என்று நம்புகிறார்கள்.தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அந்தச் சந்திப்பு குறித்து இலங்கை அரசாங்கம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு அதில் மகிழ்ச்சி இருக்காது.
றொபேர்ட் பிளேக் அவர்களின் கூற்றுக்கு பதிலுரை பெறுவதற்காக இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தை கையாளும் அமைச்சரை பிபிசியினால் தொடர்புகொள்ள முடியவில்லை.
ஆனால், அரசாங்கம் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தாம் பொறுப்பு அல்ல என்று வழமையாகவே மறுத்து வருவதுடன், ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும்வரை பொறுத்திருக்குமாறு விமர்சகர்களை கேட்டு வருகிறது.
தேசிய மட்டத்திலான நல்லிணக்கம் ஒன்றை எட்டுவதற்கு இலங்கைக்கு அவகாசம் தரப்பட வேண்டும் என்று தற்போது லண்டனில் இருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சரும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’