வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

பிறக்கும் புத்தாண்டில் துயர்கள் நீங்கி உரிமை வாழ்வு பெற்று நிமிரும் திசை நோக்கி நடப்போம்!

பி றக்கின்ற புத்தாண்டில் இன்னமும் எஞ்சியிருக்கும் துயர்களில் இருந்தும் விடுபட்டு எமது மக்கள் சகல உரிமைகளையும் பெற்று மகிழும் சூழலை உருவாக்கும் திசை நோக்கி நாம் தொடர்ந்தும் நடப்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இலங்கைத் தீவில் வாழும் இரு வேறு மொழிகளைப் பேசும் தமிழ் சிங்கள மக்கள் கூடிக்கொண்டாடி மகிழ வேண்டிய சிறப்பு திருநாள் இதுவாகும். ஆனாலும் இனங்களுக்கிடையில் பகைமையை வளர்த்து இன முரண்பாடுகள் தூண்டி விடப்பட்டதால் கடந்த காலங்களில் எம்மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடும் சூழல் இங்கு இருந்திருக்கவில்லை.

யுத்தமும் அதன் வதைகளும் வடுக்களும் எமது மக்களின் வாழ்வியல் மகிழ்ச்சியினை கருவறுத்திருந்த காலம் ஒழிந்து அமைதி தரும் சூழுல் இன்று கனிந்திருக்கிறது. இனிப் பிறக்கின்ற புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் எமது மக்கள் சகல உரிமைகளும் பெற்று நிமிர்ந்தெழும் திசை நோக்கி நடக்கும் காலத்தின் மாற்றங்களை
கட்டாயம் தரும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

இன்றைய அமைதிச்சூழலை நாம் அரசியலுரிமையை நோக்கி நகர்த்த வேண்டும். வீழ்ந்து கிடக்கும் எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்த வேண்டும். அதற்கு கடந்த கால அனுபவங்களைப் பாடங்களாகக் கற்றுக்கொண்டு சாத்தியமான வழிமுறை நோக்கி சகலரும் ஒன்றுதிரள வேண்டும்.

இனங்களுக்கிடையில் தூண்டி விடப்பட்ட பகைமைகளை ஒழிப்பதற்கு சகல அரசியல் தலைமைகளும் நேர்மையோடு உழைக்க முன்வர வேண்டும். இனங்களுக்கடையில் சகோதரத்துவ ஐக்கியமும் அரசியல் சமவுரிமையும் நிலவும் சூழலை நாமே இங்கு உருவாக்க வேண்டும்.

இவ்வாறு தனது புத்தாண்டு செய்தியில் தெரிவித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிறக்கின்ற புத்தாண்டில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் நாம் சரிவரப்பயன்படுத்தினால் அடுத்து வரும் காலச்சூழல் ஒவ்வொன்றும் சகல மக்களும் சகலதும் பெற்று ஒளிமயமானதொரு வாழ்க்கையை வாழுகின்ற காலமாகவே பிறக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’