பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பயிற்சிக்குப் பின்னரான தாதிய மாணவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற இன்றைய சந்திப்பில் வடமாகாண சபைக்கு வழங்கப்பட்ட நியமனத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கமைய வழமைபோன்று தினவரவுப் பதிவேட்டில் கையொப்பமிட்டு பணிகளைச் செய்யுமாறும் சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்து இரண்டு நாட்களில் இறுதி முடிவெடுக்கப்படுமெனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இவர்கள் கடந்த 12ம் திகதியன்று அமைச்சர் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பிரகாரம் இன்றும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன் 28 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமைகளைச் செய்யவும் அமைச்சரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’