வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 9 ஏப்ரல், 2011

கண்காணிப்பக குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது: இராணுவம்

வி டுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் தொடர்பான விபரங்கள் இல்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமத்தியுள்ள குற்றச் சாட்டினை இராணுவ தரப்பு முற்றாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவெல கருத்துத் தெரிவிக்கையில்,
இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட அனைத்து விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்பான தகவல்களை அவர்களுடைய உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இந்நிலையில் இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமத்தியுள்ளகுற்றச்சாட்டில் எதுவித உண்மை இல்லை என்றார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் ஆசியப் பிராந்திய பிரதிநிதி பிறாட் அடம்ஸ் விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேஜர் ஜெனரல் உபயமெதவெல இவ்வாறு தெரிவித்தார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’