வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

நாங்கள் நாளைய சமுதாயத்திற்கு இன்று எவற்றை விட்டுச் செல்கின்றோம் என்ற வகையில் நாம் செயற்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்)

நா ங்கள் நாளைய சமுதாயத்திற்கு இன்று எவற்றை விட்டுச் செல்கின்றோம் என்ற வகையில் நாம் செயற்பட வேண்டும் என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்துள்ளார்.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்.கிறீன் கிங்ஸ் சனசமூக நிலையம் விளையாட்டுக் கழகம் என்பன இணைந்து நடாத்திய 46 ஆவது ஆண்டு விழா மற்றும் ஈஸ்ரர் கலை நிகழ்விலும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று இந்த விளையாட்டுக் நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் மிகவும் சந்தோசமான ஒற்றுமையான முன்னேற்றகரமான விளையாட்டு நிகழ்வாக அமைந்திருந்தது. உங்களுடைய செயற்பாடுகள் எங்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப காணப்பட்டன என்றும் தெரிவித்தார்.

அத்துடன் விளையாட்டு நிகழ்வுகளில் மட்டுமன்றி பிரதேச அபிவிருத்தியிலும் பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டிலும் சேர்ந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது. உங்களது ஒத்துழைப்போடு இந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நாங்கள் என்றுமே துணை நிற்போம். அதேபோன்று உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான உறவுகள வளப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் உங்களோடு இணைந்து சகோதர உணர்வோடு செயற்படுவோம். நாங்கள் நாளை சமுதாயத்திற்கு இன்று எவற்றை விட்டுச் செல்கின்றோம் என்ற வகையில் நாம் செயற்படவேண்டும் என்றும் உதயன் அவர்கள் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்;ட யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா கருத்துரையாற்றும் போது எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள் மக்களுக்காக மக்களின் நலன்களுக்காகவே மேற்கொள்ளப்படுகின்றது. இதனைப் பொறுக்கமுடியாத சில சக்திகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு சில ஊடகங்கள் எம்மீது சேறுபூசும் நடவடிக்கையினை மேற்கொள்கின்றன என்றும் தெரிவித்தார்.

கிறீன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான பரிசில்களையும் 50 கிலோ மீற்றர் தூர சைக்கிளோட்டப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளையும் கழகங்களின் நினைவுப் பரிசில்களையும் பாராளுமன்ற உறுப்;பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களும் வெற்றிக் கிண்ணங்களையும் பரிசில்களையும் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களும் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் யாழ்.மரியன்ணை பேராலய அருட்தந்தை சகாயநாதன் சுண்டுக்குழி தெற்கு கிராமசேவையாளர் பிறேசிலா யாழ்.மாநகர உறுப்பினரும் கிறீன் கிங்ஸ் சனசமூக நிலையத்தின் தலைவருமான விஜயகாந் மற்றும் சனசமூக நிலையங்கள் விளையாட்டு கழகங்களின் அங்கத்தவர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’