வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 4 ஏப்ரல், 2011

பேராதனை யாழ் பல்கலைக்கழகங்களுடாக பனைசார் உற்பத்திகளை நவீன மயமாக்குவது தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆராய்வு

னை அபிவிருத்திச் சபையின் செயற்திட்டங்களை மென்மேலும் மேம்படுத்துவது தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அதன் தலைவர் பொதுமுகாமையாளர் உள்ளிட்டோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பில் அமைந்துள்ள அமைச்சின் செயலகத்தில் அமைச்சரின் தலைமையில் இன்று நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பனை அபிவிருத்திச் சபையூடாக எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது கொழும்பு பம்பலப்பிட்டியில் பனை அபிவிருத்திச் சபையின் கிளைக் காரியாலயத்தை இயக்குவது தொடர்பாகவும் அங்கு துறைசார்ந்த உற்பத்திகளை விருத்தி செய்வது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இக்காரியாலயம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் திறந்து வைக்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் அவர்களால் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் சங்கானை மற்றும் கோண்டாவில் பகுதிகளில் பனங்கட்டி தொழிற்சாலைகளை அமைப்பது தொடர்பாகவும் பனை அபிவிருத்திச் சபையின் அலுவலகம் ஒன்றை கிளிநொச்சியில் திறப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

முக்கியமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கித்துள் சார்ந்த உற்பத்திகள் குறித்து நவீன முறையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் பனை சார்ந்த உற்பத்திகளில் நவீன தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டு மேம்படுத்துவது தொடர்பாகவும் கற்பகம் விற்பனை நிலையங்களிற்கூடாக கித்துள் மற்றும் பனை சார்ந்த உற்பத்திப் பொருட்களை நாடளாவிய ரீதியில் விற்பனை செய்வது தொடர்பாகவும் ஏனைய பல விடயங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானசோதி அமைச்சின் ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம் உள்ளிட்டோருடன் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் பொதுமுகாமையாளர் லோகநாதன் பணிப்பாளர் சந்துரு மற்றும் ஆராய்ச்சி உதவி முகாமையாளர் விஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’