வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 30 ஏப்ரல், 2011

ரொபர்ட் பிளெக் இலங்கை வருகிறார்

தெ ற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பயணத்தை மேற்கொண்டு புறப்படுவார்; என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளிலும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் ஆகியோரை ரொபர்ட் பிளெக் சந்தித்து பேசவுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை நிராகரித்ததையடுத்து, போர் தொடர்பான முழுமையான பதிவுகளை கொண்டிருப்பதை அவர் ஊக்குவிப்பார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரொபர்ட் பிளெக்கின் விஜயம் ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அவ்விஜயத்திற்கும் நிபுணர் குழு அறிக்கைக்கும் தொடர்பிருக்கவில்லை. எனினும் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட இவ்வறிக்கை தொடர்பாக இம்முறை ரொபர்ட் பிளெக்கிற்கும் இலங்கை அரசாங்கத் தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின்போது இவ்விடயம் ஆராயப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, போர் தொடர்பான பொறுப்புடைமை குறித்து இலங்கையுடனும் ஏனைய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தன்னை இனங்காட்ட விரும்பாத மற்றொரு அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’