உ லக நாடுகள் யுத்தத்திற்காக செலவிடும் நிதியை அபிவிருத்திக்காக செலவிடுவதற்கு முன்வர வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றைய தினம் சார்க் நாடுகளின் பொது சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர்களுக்கான மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பேதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2005 ஆம் ஆண்டு நாட்டின் தேசிய வருமானத்தில் ஐந்து வீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கியதாகவும் அதனைத் தற்போது மூன்று வீதமாகக் குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டிற்குள் தேசிய மட்டத்தில் வறுமையைக் குறைப்பது என்ற மில்லேனிய இலக்கை அண்மித்ததாக நாம் முன்னேறி வருகிறோம் என்றார்.
இந் நிகழ்வில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, இந்திய கிராமிய அபிவிருத்தி, 'பஞ்சாயத் ராஜ்ய" அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ் முக்த் ஆகியோரும் உரையாற்றியதுடன் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’