வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 ஏப்ரல், 2011

போட்டிகளில் பங்குபற்றாமல் சிகிச்சை பெறுமாறு மாலிங்கவுக்கு உத்தரவு

.பி.எல். போட்டிகளில் பங்குபற்றுவதை நிறுத்திவிட்டு, காயத்திற்கு சிகிச்சை பெறுமாறு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவை இலங்கை கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது.

மாலிங்க தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறியமை குறித்து இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
'தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்து சுற்றுலாவில் பங்குபற்ற முடியாதென எம்மிடம் கூறிய நிலையில் தொடர்ந்தும் ஐ.பி.எல். போட்டிகளில் அவர் பங்குபற்றுவது ஆபத்தானது.
நாம் அவரை அங்கிருந்து திரும்பிவந்து சிகிச்சை பெறுமாறு கோரியுள்ளோம்' என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரும் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவருமான துலிப் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட குழாமில் மாலிங்க இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழங்கால் உபாதை காரணமாக தன்னால் டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்ற முடியாதென மாலிங்க கடிதமொன்றின் மூலம் தெரிவித்திருந்ததாகவும் மெண்டிஸ் தெரிவித்தார்.
ஆனால் அவர் தொடர்ந்தும் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மாலிங்கவின் பதிலை எதிர்பார்த்திருப்பதாக துலிப் மெண்டிஸ் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’