இலங்கையர்களுக்கு குடிசை வீடுகளுக்குப் பதிலாக நல்ல நிலையிலான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரின் சூழலை மாற்றியமைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி நேற்று அலரி மாளிகையில் புதுவருட விருந்துபசாரம் ஒன்றை வழங்கினார்.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் குடிசை வீடுகளை அகற்றிவிட்டு அனைவருக்கும் நல்ல வீடொன்றைப் பெற்றுத் தரும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அரசியல் தேவைகளுக்கு அன்றி மக்களின் தேவைகளைக் கருத்திற் கொண்டே அந்த மக்களுக்கு வசிப்பதற்கான மிகவும் சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’