அ ங்கத்துவ நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரம் இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணைகள் நடப்பதற்கு இலங்கை ஒத்துக்கொள்ள வேண்டும் அல்லது ஒரு பொருத்தமான சர்வதேச அரங்கத்தில் உறுப்பு நாடுகள் இதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என இந்த அறிக்கை வெளியான பின் விடுக்கப்பட்ட ஐ.நா.வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக பான் கீ மூன் நியமித்த மூவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கையை இன்று செவ்வாய்க்கிழமை ஐ.நா. பகிரங்கமாக வெளியிட்டது.
இவ்வறிக்கையை வெளியிட வேண்டாமென இலங்கை அரசாங்கம் வலியுறுத்தயிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் 216 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஐ.நா. இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. இவ்வறிக்கை தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
' பொருத்தமான சர்வதேச அரங்கம்' என்பதனால் கருத்தப்படுவது யாது என பான் கி மூன் கூறவில்லை. இது ஐ.நா.பாதுகாப்பு சபை, பொதுச்சபை, அல்லது மனித உரிமை கவுன்ஸிலாக இருக்க முடியும். இதேவேளை யுத்தத்தின் இறுதி கட்டத்தின்போது ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை பற்றி ஒரு விசாரணை நடத்தப்படுமென ஐ.நா.வின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.
'இலங்கையில் இடம்பெற்ற போரின்போது, குறிப்பாக போரின் கடைசி கட்டத்தில், தனது மனிதாபிமான மற்றும் மக்களை பாதுகாக்கும் கடப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பாக ஐ.நா. வின் கடப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டதா என்பதை ஆராய வேண்டும் என்ற சிபாரிசுக்கு சாதகமாக பதிலளிக்க செயலாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனங்களுடன் நிதி மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்ட பின்னர் அந்த ஆய்வுக்கான சரியான முறைமை தீர்மானிக்கப்படும்' என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, "நிபுணர் குழுவின் முதலாவது தீவிரமான சிபாரிசானது மேற்படி பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வினைத்திறனான பதிலளிக்கும் கடப்பாட்டுச் செயன்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாகும். உண்மையான விசாரணைகளுடன் இதை ஆரம்பிக்க வேண்டும். இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்களுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா. செயலாளர் நாயகம் என்ற தொடர்ச்சியான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்" எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருபக்கத்தினரும் சர்வதேச மனிதநேய, மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்படுமளவுக்கு சான்றுகள் இருப்பதாக 216 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் இணை நிறுவனங்கள் பொதுமக்களை பாதுகாக்க கூடிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையை பார்வையிடுவதற்கு இங்கே அழுத்தவும்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’