வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 ஏப்ரல், 2011

இந்திய அணு ஏவுகணைகள் கழுதைகள்: பாகிஸ்தான்

பா கிஸ்தான் அணு ஏவுகணைகள் இந்திய ஏவுகணைகளைவிட உயர்ந்தது என்று தி நேஷன் ஆசிரியரும், நசாரியா-இ- பாகிஸ்தான் அறக்கட்டளையின் தலைவருமான மஜித் நிசாமி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது,

எங்கள் ஏவுகணைகள் குதிரைகள் போன்றது. இந்தியர்களின் ஏவுகணைகள் கழுதைகள் போன்றதாகும். போர்க்காலங்களில் இந்திய ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவுகணைகள் தோற்கடித்துவிடும்.
நம் சுதந்திரத்தையும், வல்லமையும் காக்க பாகிஸ்தானின் தேசிய கவி காலமான டாக்டர் அல்லாமா முகமது இக்பாலின் தத்துவங்கள் மற்றும் முகமது நபியின் போதனைகள் படியும் தான் நடக்க வேண்டும் என்றார்.
பாகிஸ்தான் வர்த்தகச் செயலாளர் ஜாபர் மகமூத் இந்த வார துவக்கத்தில் கூறுகையில்,
பாகிஸ்தானுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்த சலுகையை நாங்கள் நிச்சயம் கருத்தில் கொள்வோம் என்றார்.

இதற்கு நிசாமி கூறியது,

பாகிஸ்தானுக்கு மின்சாரம் வழங்க இந்தியா காஷ்மீர் ஆறுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. நம் வர்த்தக செயலரும் வெட்கமின்றி இந்தியாவின் சலுகையை கருத்தில் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து மின்சாரம் கிடைப்பதை வெறுக்கிறோம்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உதவியுடன் இந்தியா பாகிஸ்தானை குறிவைக்கிறது. அணு குண்டு வைத்திருக்கும் ஒரே முஸ்லீம் நாடு பாகிஸ்தான் தான். இந்தியாவை அடக்குவது ஒவ்வொரு பாகிஸ்தானியரின் கடமை என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’