வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 ஏப்ரல், 2011

அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் பறிமுதல்-ஆசாமிகளுக்கு வலைவீச்சு

சா த்தூர் அதி்முக வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேட்பாளர்கள் விளம்பரம் செய்வதற்காக தேர்தல் அதிகாரி மற்றும் கண்காணிப்பு குழு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் உதயகுமாருக்கு வாக்களிக்க கோரி மாதிரி வாக்குப் பதிவு இயந்திரம் தயாரித்து கொண்டு வந்து சாத்தூர் தொகுதியில் பிரசாரம் நடந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பைபாஸ் ரோட்டில் வீடியோ கண்காணிப்பு குழு அதிகாரி சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக முன்னால் சென்ற மினி வேனை மடக்கிப் பிடித்தனர். வேனில் அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு வினியோகிக்க பரிசு பொருட்கள் இருக்கலாம் என்ற கோணத்தில் பெட்டியை திறந்து பார்த்தனர். பெட்டியில் போலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தன. அதில் முதலாவது கட்டத்தில் உள்ள பட்டனை அழுத்தவும், சிவப்பு விளக்கு எரியும். இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவாகிவிடும் என்ற வாசகம் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது.
முதலாவது பட்டன் உள்ள இடத்தில் சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்பி உதயகுமார் பெயரும், இரட்டை இலை சின்னமும் அச்சிடப்பட்டிருந்தது. பட்டனை அழுத்தினால் பீப் ஓலி வரும் வகையில் தயாரிக்கப்பட்டு இருந்த அந்த 50 இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இயந்திரத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள் அதனை கொண்டு வந்த வேனையும், குற்றவாளிகளையும் தப்ப விட்டு விட்டனர். அவர்களை தற்போது தேடி வருகின்றனர்.

16 ஓட்டுக்காக 152 கிமீ எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு இயந்திரம்

தமிழக சட்டசபை தேர்தலில் 16 ஓட்டுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 152 கிமீ தூரம் எடுத்துச் செல்ல வேண்டிய வினோதம் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் நிகழ்ந்துள்ளது.
பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சி வார்டு எண் 1, பிளாக் எண் 4ல் உள்ள வாக்காளர்கள் 16 பேர் அப்பர் கோதையாறு பகுதியில் உள்ளனர். இவர்களுக்கான வாக்குச்சாவடி அங்குள்ள மனமகிழ் மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் 4 அலுவலர்கள், ஒரு மண்டல் அலுவலர், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் என மொத்தம் 10 பேர் 2 ஜீப்களில் சென்றனர்.
தக்கலையில் இருந்து அணை மற்றும் மலை பகுதிகளை கடந்து செல்ல போதிய பாதை வசதிகள் இல்லாததால் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை வழியாக 152 கிமீ தூரம் கடந்து அப்பர் கோதையாறு கொண்டு செல்லப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தக பின்னர் இதே பாதையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குமரி மாவட்டம் கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள கோணம் அரசு பாலிடெக்னிக் கட்டிடத்திற்கு எடுத்து வரப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’