வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 ஏப்ரல், 2011

23.4.2010 அன்று பி பி சி தமிழோசையில் எனது சிறு மடல் ஆடியோ இணைப்பு

லங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்துள்ள குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஐநாவின் நிபுணர் குழு தயாரித்துள்ள இறுதியறிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஏன் அதை திரு .சம்பந்தர் ஏற்பதாக சொல்ல வில்லை? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளுக்கு புலிகளின் செயல்பாடுகளுக்கு அரசியல் வடிவம் கொடுத்ததின் மூலம் யுத்த குற்றம் இளைத்தவர்கள்தான் இதேவேளை, விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், அவர்களை ஆதரித்த கட்சி என்ற வகையில், சுயவிமர்சனம் ஒன்றை செய்துகொள்ளவும் நீங்கள் தயாரா என்ற பி பி சி செய்தியாளரின் கேள்விக்கு திரு .சம்பந்தர் அவர்களின் பதில் நகைப்புக்குரியது
04/01/09 அன்று இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சி நகரப்பகுதியை இலங்கைப் படையினர் கைப்பற்றிய செவ்வியில். பி பி சி தமிழோசைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கருத்து தெரிவிந்த திரு .சிவாஜிலிங்கம் கிளிநொச்சியை நீங்கள் பிடிக்க முடியாது என்றும் நீங்கள் தலை கிழாக நின்றாலும் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடியாது என்றும் கூறியிருந்தார் அப்படியானால் அது யாருடைய கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடையதுதானே? விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புலிகளின் பங்காளியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பதில் கூறவேண்டும் அரசாங்கம் யுத்த குற்றத்தை புறக்கணிப்பது போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகள் மேல் பலியைப் போட்டு தப்பிக்கொள்ள நினைக்கின்றதா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’