வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 மார்ச், 2011

லசித் மாலிங்க ஹெட்ரிக் சாதனை

கென்ய அணியுடனான உலக கிண்ணப் போட்டியில் இலங்கை வீரர் லசித் மாலிங்க சற்றுமுன் ஹெட்ரிக் சாதனை புரிந்தார்.
உலக கிண்ண போட்டிகளில் பெறப்பட்ட 7 ஆவது ஹெட்ரிக் இதுவாகும். இவ்வருட உலககிண்ண போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது ஹெட்ரிக் சாதனை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெறும் இப்போட்டியின் 42 ஆவது ஓவரின் கடைசி பந்துவீச்சில் மிஷ்ராவை ஆட்டமிழக்கச் செய்த மாலிங்க, தனது அடுத்த ஓவரின் முதல் இரு பந்துகளிலும் முறையே இப்போட்டியில் ஒங்கோன்டோ, என்கோச்சையும் ஆட்டமிழக்கச்செய்ததன் மூலம் ஹெட்ரிக் சாதனை புரிந்தார்.
இதற்குமுன் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரிலும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக மாலிங்க ஹெட்ரிக் சாதனை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் கென்ய அணி 142 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. லசித் மாலிங்க 38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’