வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 மார்ச், 2011

புனர்வாழ்வு முகாமில் தற்கொலை

லங்கையில் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கான பயிற்சி முகாம் ஒன்றில் இருந்துவந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி கட்டிடத் தொகுதியில் இயங்கி வருகின்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களுக்கான பயிற்சி முகாமில் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று வந்த கிளிநொச்சி மாவட்டம் பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவானைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிர்வாதம் நியூஸ்டன் திங்களன்று காலை கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் சுகயீனம் காரணமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்த இவர், இறுதி யுத்தத்தின் முடிவில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தபோது ஓமந்தை முகாமில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒருநாள் இருந்தவர்களும் இராணுவத்தினரிடம் சரணடைய வேண்டும் என அப்போது அறிவிக்கப்பட்டதை அடுத்தே இவர் சரணடைந்து கடந்த இரண்டு வருடங்களாகப் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
ஆறு சகோதரர்களுடன் பிறந்த இவரது இரண்டு சகோதரிகள் அடுத்தடுத்து தமது கணவன்மாரை அண்மையில் நோய்க்குப் பலி கொடுத்திருந்ததும், இரண்டு வருடங்கள் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்றும் விடுதலை கிடைக்காமல் இருந்ததனாலும், இறப்பதற்கு முன்னர் இவர் மனமுடைந்து காணப்பட்டதாக மரண விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இவர் புனர்வாழ்வு பெற்று வந்த முகாமில், 38 அடி ஆழமுடைய பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த கிணறு ஒன்றிலேயே இவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’