வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 மார்ச், 2011

மீன்பிடித் துறைக்கு அதி சக்திவாய்ந்த படகுகளை கொள்ளவனவு செய்ய தீர்மானம்: ராஜித்த

ழ்கடல் மற்றம் சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடிப்பதற்காக 1400 அதி சக்திவாய்ந்த படகுகளை கொள்வனவு செய்ய உள்ளதாக கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் அல் பைஸால் நிறுவனத்துடன் இதற்கான வர்த்தக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதன்படி அந்த நிறுவனம் வழங்கும் 300 மில்லியன் அமெரிக்க டொலர் மூலம் குறிப்பிட்ட படகுகளை கொள்வனவு செய்ய உததேசிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இவ்வருடம் 400 படகுகளும் இரண்டாம் கட்டமாக அடுத்த வருடம் ஆயிரம் படகுகளும் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’