வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 மார்ச், 2011

லிபியா மீது சிலுவைப்போர்: கடாஃபி

லி பியாவில் சர்வதேச கூட்டணிப் படையினர் கடந்த சனிக்கிழமை தமது வான் தாக்குதல்களை ஆரம்பித்ததன் பின்னர் முதல் தடவையாக அந்நாட்டின் தலைவர் முவம்மர் கடாஃபி திரிபொலியில் மக்கள் முன்னிலையில் தோன்றி உரையாற்றியுள்ளார்.
தன்னுடைய ஆதரவாளர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று அவர் சூளுரைத்துள்ளார். லிபியா மீதான கூட்டணிப் படையினரின் முதல் நாள் குண்டுவீச்சில் இலக்காக்கப்பட்டிருந்த தனது வீட்டில் இருந்து அவர் இந்த உரையை ஆற்றியிருப்பதாகத் தெரிகிறது.
ஆத்திரம் பொங்கவும், எதிர்த்துச் சவால் விடும் விதமாகவும் கடாஃபியின் உரை அமைந்திருந்தது.
சூளுரை
 வான் தாக்குதலுக்கு எதிரான மிகச் சக்திவாய்ந்த தற்காப்பு ஆயுதம் என்றால் அது மக்கள்தான். இங்கே மக்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு நடுவில்தான் நான் இருக்கிறேன்.
 
கர்ணல் கடாஃபி

சர்வதேச கூட்டணிப் படையினரை சிலுவைப்போராளிகள் என்று வருணித்த கடாஃபி, முஸ்லிம் படைகள் அனைத்தும் ஒன்று திரண்டு அந்த கிறிஸ்தவப் படைக்கு எதிராக போரிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
"சிலுவைப்போர்"
 கிறிஸ்தவ மதத்துக்காக போரிடும் நாடுகள் இஸ்லாத்தின் மீது புதிய சிலுவைப்போர் ஒன்றைத் தொடுத்துள்ளன. உலகெங்கும் இஸ்லாம் வாழ வேண்டும். இந்த யுத்தத்தில் இஸ்லாமிய இராணுவம் அனைத்தும் பங்குகொள்ள வேண்டும்.
 
கர்ணல் கடாஃபி

தன்னை எதிர்த்து மோதுபவர்கள் ஃபாஸிஸவாதிகள் என்றும் அவர்கள் இறுதியில் சரித்திரத்தின் குப்பைத் தொட்டியில்தான் சென்று சேருவார்கள் என கடாஃபி தெரிவித்தார்.
ஒரு பக்கம் கடாஃபி இவ்வாறு சவால் விட்டாலும், மறுபக்கம் அவரைச் சுற்றியிருப்பவர்கள் தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளிவர அவசர அவசரமாக வழியொன்றை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’