வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 மார்ச், 2011

சகவாழ்வினை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுவது இந்துக்களின் பொறுப்பு: சிவராத்திரி செய்தியில் பிரதமர்

சிவராத்திரி தினத்தில் சகவாழ்வினை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுவது இந்துக்களின் பொறுப்பும் கடமையுமாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவபெருமானுக்காக இரவுப் பூஜை நடத்தும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
சிவபெருமானுக்காக நடத்தும் இந்தப் பூஜை மூலம் பக்தர்களின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதாக இந்து மத பரம்பரை விருத்தாந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இந்த இரவில் உணவு, பானங்களைத் தவிர்த்து விரதம் அனுஷ்டித்து சிவபெருமானுக்குப் பூஜை நடத்துவது இந்து மத பக்தர்கள் தொன்று தொட்டு நடத்திவரும் மதக் கிரியைகளில் ஒன்றாகும். இது சம்பந்தமாக இந்துக் கலாசாரத்தில் பல வரலாற்றுக் கதைகள் காணப்படுகின்றன.
இம்முறை சிவராத்திரி தின பிரதான பூஜையை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முதன் முறையாக மகாசிவராத்திரி தின தேசிய வைபவம் வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படவிருக்கிறது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’