வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 31 மார்ச், 2011

பாடசாலைகளின் அபிவிருத்தி அதன் பெறுபேறுகளிலேயே தங்கியுள்ளது - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

பா டசாலைகள் நல்ல பெறுபேறுகளை வெளிக்காட்டும்போதே அப்பாடசாலைகளுக்கான அதிகரித்த அபிவிருத்திச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (30) கிளிநொச்சி புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயத்திற்கு என்ரிப் திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இப்பாடசாலை கல்விச் செயற்பாட்டில் அதிகரித்த நல்ல பெறுபேறுகளை வெளிகாட்டும் போது தன்னால் இயன்ற உதவிகளை செய்து தருவதாகவும் தெரிவித்த சந்திரகுமார் அவர்கள் பாடசாலைகளின் தேவைகளை அதிபர் ஆசிரியர்கள் மூலம் தெரிந்து கொண்டதாகவும் அந்த தேவைகள் எதிர்காலத்தில் படிப்படியாகத் தீர்க்கப்படும் எனவும் அதன் முன்னோடியாக தற்போது இப்பாடசாலைக்கு ஒரு மின்பிறப்பாக்கி வழங்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் ஒப்பந்தக்காரர்கள் பாடசாலைகள் மற்றும் பொது கட்டிடங்கள் கட்டும்போது வெறுமனே இலாப நோக்கம் கொண்டதாக அன்றி பொது நோக்குடன் தங்களுடைய பங்களிப்பை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொணட்டார்.

இங்கு உரையாற்றிய பாடசாலை அதிபர் சிறிதரன் அவர்கள் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் எமது பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் விஜயம் மேற்கொண்டபோது நாம் போதியளவு வகுப்பறை கட்டிடங்கள் இன்றி மழையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததனை நேரில் பார்வையிட்ட அவர் உடனடியாகவே உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு என்ரிப் திட்டத்தின் கீழ் 4.7மில்லியன் ரூபா பெறுதியிலான நிரந்தர கட்டிடம் ஒன்றினை பெற்றுதந்துள்ளார். இது எமது பாடசாலை வரலாற்றில் மறக்க முடியாத மகிச்சியான நாள் எனவே நாம் என்றும் எமது பாடசாலை சமூகம் மற்றும் இக்கிராம மக்கள் சார்பாக நன்றியுடையவர்களாக இருப்போம் எனவும் குறிப்பிட்டார்.

பாடசாலை அதிபர் சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிளிநொச்சி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் முருகவேல் ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் பிரதேச இராணுவ அதிகாரி பாடசாலை அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் ஆசிரியர்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச தொடர்பாளர்கள் தில்லைவேல் தங்கராசா மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’