வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 மார்ச், 2011

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு ஜப்பான் அழுத்தம் கொடுக்க வேண்டும்: த.தே.கூ.

மிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்க இலங்கை அரசாங்கத்திற்கு ஜப்பான் அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசியிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசங்களை மீள் கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பான் சமாதானம் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் எனும் திட்டத்தின் கீழ் விசேட அழைப்பின் பேரில் இலங்கையில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன் தலைமையிலான மூவினங்களைக் கொண்ட புத்திஜீவிகள் 10 பேர் ஜப்பானுக்கு கடந்த 21 ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கு 10 நாட்கள் தங்கியிருந்து அரசியல்வாதிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது அணுகுண்டில் அழிக்கப்பட்ட, சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பவற்றை பார்வையிடவுள்ளனர்.
இதில் முதற்கட்டமாக ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசியுடனான சந்திப்பின் போது இவ்வேண்டுகோளை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது நியாயபூர்வமான உரிமைக்காக போராடி வருகின்றனர். இவர்களின் இந்த உரிமை போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரித்து தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை பெற்றுத்தர இலங்கை அரசாங்கத்திற்கு ஜப்பான் அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கடந்த கால யுத்தத்தினால் வடகிழக்கு தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தும் வீடிழந்தும் பொருள் இழந்தும் உறவுகள் இழந்தும் மண்ணிழந்தும் அநாதரவான நிலையில் வீதியில் இன்று உள்ளனர். இன்று தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான் என்பதை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலம் தமிழ் மக்கள் நிரூபித்துள்ளனர்.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுத்தர ஜப்பானும் மற்றும் சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அத்தோடு தமிழ் மக்களுக்கான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’