விலைவாசி அதிகரிப்பினால் சரத்பொன்சேகா உள்ளிட்ட படையினர் புலிகளை தோற்கடித்து எங்களுக்கு பெற்றுக்கொடுத்த பொருளாதார வெற்றியை பொருளாதாரத்திற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் காட்டிக்கொடுத்து விட்டது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தெல்தெனிய, மாத்தறை மற்றும் கலகெதர ஆகிய இடங்களில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கத்தின் அதிகாரம் இன்றி என்ன செய்யமுடியும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கம் உங்களுடைய பிரதேசங்களுக்கு வந்து தேர்தலுக்கு பின்னர் வீதிகளை நல்ல முறையில் நிர்மாணித்து தருவதாகவும் வீதிகளை அபிவிருத்தி செய்வதாகவும் ஜனாதிபதி தேர்தலின் போது சம்பள உயர்வு மற்றும் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து தருவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
பாராளுமன்ற தேர்தலின் போது வேலைவாய்ப்பில் இணைத்து கொள்வதற்காக கூறி விண்ணப்பப் பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டன. அரசாங்கத்தினால் கூறப்பட்ட வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதா? தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதா? சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதா? இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? இவையாவும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆட்சியில் அரசாங்கம் இருக்கின்ற போது செய்தது என்ன?அப்படியாயின் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றியீட்டினால் அதிலிருக்கின்ற நிதி மற்றும் வெளிநாட்டு நிதியுதவியின் மூலம் இந்த அபிவிருத்தி திட்டங்களை எங்களால் முன்னெடுக்க முடியும்.
எனினும் வீதிக்கு கொங்கிறீட் போடுவதாக கூறி 50 வீத பணத்தை கொள்ளயடித்து கொள்வது எங்களுக்கு தெரியாது. அதற்கு நாம் இடமளிக்கவும் மாட்டோம். நல்லாட்சியை மேம்படுத்துவதற்கு நாம் நடடிக்கை எடுத்துள்ளோம் என்பதனால் இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
எனக்கு தெரிந்த வகையில் மக்கள் வாழ முடியாத நிலையில் கிராமங்களில் இருக்கின்றனர் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பாடசாலை மாணவர்களை மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதில் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். அரசாங்கம் தன்னுடைய சொந்த தேவைகளை நிறைவேற்றி கொள்வதில் முன்நிற்கின்றதே தவிர மக்களின் நலனில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்கிறார். _

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’