வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 6 மார்ச், 2011

முரளி தொடர்பான குற்றச்சாட்டை ஐ.சி.சி. நிராகரிப்பு

லங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தொடர்பாக அவுஸ்திரேலிய நடுவர் டெரல் ஹெயார் தெரிவித்த குற்றச்சாட்டுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் (ஐ.சி.சி.) நிராகரித்துள்ளது.

முத்தையா முரளிதரன் இப்போதும் போட்டிகளிலும் பந்தை முறையற்ற விதமாக வீசி எறிந்ததாகவும் ஆனால், முரளி ஓய்வு பெறவுள்ள நிலையில் அவர் பந்தை எறிகிறார் எனக் கூறுவதற்கு களத்திலுள்ள நடுவர்கள் தயங்குவதாகவும் டெரல் ஹெயார் தெரிவித்திருந்தார்.
கிஸ்தானுடனான உலகக்கிண்ணப் போட்டிகளிலும் முரளி முறையற்றவிதமாக பந்தை எறிந்தாக ஹெயார் கூறினார்.
எனினும் தனது நடுவர்கள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.சி.சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹாருன் லோர்கட், கூறுகையில், "எமது சிறப்பு நடுவர் குழாமிலும் நாம் ஏற்படுத்தியுள்ள விதிகளிலும் நாம் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளோம். அவற்றை அமுல்படுத்துவது நடுவர்களை சார்ந்ததாகும். டெரல் இப்போது ஐ.சி.சி. நடுவர் குழாமில் இல்லை. அவரின் பாத்திரம் அந்தளவுதான்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’