வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 6 மார்ச், 2011

40 வருடகால பேச்சில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினால் தமிழர் பிரச்சினை தீரும்: மங்கள சமரவீர எம்.பி _

னப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்காக அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளை மேற் கொண்டு வருவதானது ஒரு அரசியல் நாடகம். கடந்த 40 வருடங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த பேச்சுவார்த் தைகளின் போது எடுக்கப்பட்ட தீர்மானங் களை நடைமுறைப்படுத்தினாலேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன் றைப் பெற்றுக் கொடுக்க முடியும் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற் காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டால் மாத்திரம் போதாது அதில் எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறியதாவது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர் வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமாயின் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை.
கடந்த 40 வருடங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த பேச்சுவார்த்தைகளின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினாலேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர் வொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும். எனினும் இந்த அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசியம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’