வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 மார்ச், 2011

மாதர் அபிவிருத்திச் சங்கங்கள் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன்

மூகத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற அநீதிகளையும் பெண்களால் ஏற்படுத்தப்படுகின்ற தவறுகளையும் சமூகத்திலிருந்து களைவதற்கு மாதர் அபிவிருத்திச் சங்கங்கள் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின்(உதயன்) அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று (26) மட்டுவில் வடக்கு சாவகச்சேரியில் சமூக முன்னெடுத்தல் குழுவின் ஈராண்டு நிறைவும் மகளிர் தின விழாவிலும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் நாங்கள் பெண்களின் உரிமைகள் சம்மந்தமாக பேசியதும் போராடியதும் பெண்களாக திரண்டு கோரிக்கைகளை முன்வைத்துச் செயற்பட்டதன் மூலம் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கப் பெற்றதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் இன்று அவ்வாறு கிடைத்த உரிமைகளை எவ்வாறு பாதுகாத்துக்கொள்கின்றோம் என்பதே பிரதானமானது. எனவே சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற அநீதிகளையும் பெண்களால் ஏற்படுத்தப்படுகின்ற தவறுகளையும் சமூகத்திலிருந்து களைவதற்கு மாதர் அபிவிருத்திச் சங்கங்கள் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இதனுடன் மாதர் சங்கங்கள் தொடர்ந்தும் பெண்களுக்கான சேவைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக எமது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) உரையாற்றும் போது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இரண்டுவகையான பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஒன்றுசமூகத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற அநீதிகள் மற்றையது பெண்களால் இழைக்கப்படுகின்ற தவறுகள். இன்று யாழ்குடாநாட்டில் சிசுக்கொலைகள் அதிகரித்துச் செல்கின்றன இவ்வாறான சமூக சீர்கேடுகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும். நாங்கள் இன்று மக்களுடன் மக்களாக நின்று சேவை செய்கின்ற போதும் சில தனிமனிதர்கள் விடுகின்ற தவறுகளை எமது கட்சியுடன் சம்மந்தப்படுத்தி சேறுபூசும் நடவடிக்கையினை சில ஊடகங்கள் மேற்கொள்கின்றன. ஆனால் நாம் மக்களுக்கான பணிகளை திறம்பட மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

மாதர் அபிவிருத்திச் சங்க செயலாளர் திருமதி லூயிஸ் மன்ரேசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்மராட்சி பிரதேச அமைப்பாளர் வலன்டைன் ஈ.பி.டி.பியின் சிரேஸ்ட உறுப்பினர் சாள்ஸ் மற்றும் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மக்கள் வங்கியின் சாவகச்சேரி கிளை முகாமையாளர் கந்தையா சண்முகலிங்கம் கெயர் நிறுவன பிரதித் திட்டப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சமூக முன்னெடுத்தல் குழுவின் சிறந்த செயற்பாடுகளை மேற்கொண்ட அங்கத்தவர்களுக்கு பரிசில்கள் விருந்தினர்களால் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’