வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 மார்ச், 2011

பளை வைத்தியசாலை விரைவில் பழைய நிலைக்கு திரும்பும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

கி
ளிநொச்சி பளை வைத்தியசாலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டு பிரதேச மக்களுக்கு நிறைவான சேவை வழங்கப்படும் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
இன்று (10) பளை கரந்தாய் பிரதேசத்தில் 74 இலட்சம் ரூபா செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவு அதிகளவான அடிப்படைப் பிரச்சினைகளை கொண்ட பிரதேசமாக உள்ளது காரணம் தாமதமான மீள்குடியேற்றமே எனவே விரைவில் இந்நிலைமையினை மாற்றியமைக்க எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் குறிப்பாக இப்பிரதேசத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

இம்மாவட்டத்தில் பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதில் ஓன்பது ஆரம்ப சுகாதார நிலையங்களை புனரமைப்பதற்கு தான் நிதியினை ஓதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அழகான ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு கிருஸ்ணபிள்ளை மயில்வாகனம் சாரதா ஆகியோர் தங்களுடைய காணிகளை அன்பளிப்பு செய்துள்ளனர் எனவே மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நானும் இப்பிரதேச மக்களும் என்றும் அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

சர்வோதயம் நிறுவனத்தினரால் அமைக்கப்படும் இவ் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பளை சுகாதார வைத்திய அதிகாரி செவ்வி மைதிலி சர்வோதய நிறுவன மாவட்ட இணைப்பாளர் உதயகுமார் திட்ட முகாமையாளர் மனோச் திட்ட இணைப்பாளர் டினேஸ்வரன் தொழிநுட்ப ஆலோசகர் லிங்கேஸ்வரன் மற்றும் சிரேஸ்ட சுகாதார பரிசோதகர் சிவகுமார் ஈபிடிபி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் சோரன்பற்று மாசார் முகாவில் கிராம அலுவலர்கள் பச்சிலைப்பள்ளி அபிவிருத்தி பேரவையின் உபதலைவர் மார்கண்டு கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’