வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 31 மார்ச், 2011

செய்தி ஆசிரியர் கைது

லங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் இணைய தளம் ஒன்றின் ஆசிரியர், மிரட்டல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
லங்கா ஈ நியூஸ் என்னும் செய்தி இணைய தளத்தின் செய்தி ஆசிரியரான பென்னட் ரூபசிங்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இந்த இணைய தள அலுவலகம் முன்னர் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரின் தமயனை பென்னட் ரூபசிங்க தொலைபேசியில் மிரட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்டு செயற்படுகின்ற எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பைச் சேர்ந்த கில்ஸ் லோர்டட் அவர்கள் இந்த கைதைக் கண்டித்துள்ளார்.
அந்தச் செய்தி ஊடகத்துக்கு எதிரான தொடர்ச்சியான தொல்லைகளின் ஒரு பகுதியாகவே இதனை தான் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
''அந்த இணைய தளம் தனது பணிகளைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு அந்த உரிமை இருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைப் பொறுத்தவரை சர்வதேச நியமங்களுக்கு இசைவாக செயற்படுமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தைக் கோருகிறோம்'' என்று கில்ஸ் லோர்டட் கூறியுள்ளார்.
இந்த ஊடகத்தில் பணியாற்றிய கேலிச்சித்திர செய்தியாளரான பிரகீத் எக்னலிகொட ஒருவருடத்துக்கு முன்னதாக காணாமல் போனார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’