வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 மார்ச், 2011

இலங்கையுடனான உறவுகளை தொடர சர்வதேச நாடுகள் விருப்பம் :அமைச்சர் மஹிந்த சமரசிங்க

ர்வதேச நாடுகள் இலங்கையுடன் சிறந்த முறையில் உறவுகளை தொடரவே விரும்புகின்றன. ஜெனிவாவில் வைத்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியபோது இதனை உணர முடிந்தது. இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் நான் வெளிநாடுகளுக்கு தெளிவாக விளக்கிக்கூறினேன் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய அமைச்சர் சர்வதேச உறவுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறுகையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள சென்றிருந்த எனது தலைமையிலான இலங்கை தூதுக்குழு சர்வதேச நாடுகளின் பல்வேறு பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தியது. இதன்போது சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நாங்கள் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக விளக்கிக்கூறினோம்.
சர்வதேச நாடுகள் இலங்கையுடன் தொடர்ந்து சிறந்த முறையில் உறவுகளை தொடர தயாராக இருப்பதை நாங்கள் இந்த சந்திப்புக்களிலிருந்து புரிந்துகொண்டோம். எனவே நாங்களும் சர்வதேச நாடுகளுடன் தொடர்புகளை தொடர்ந்து பேண எதிர்பார்க்கின்றோம்.
இதேவேளை இலங்கை அரசாங்கம் தயாரித்துவருகின்ற மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பிலும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளுடன் நாங்கள் பேச்சு நடத்தினோம் என்றார். ஐ.நா. வின் மனித உரிமை பேரவையில் இலங்கை சார்பில் உரையாற்றிய மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகள், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அவசரகால சட்ட விதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’