வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 மார்ச், 2011

கொள்ளை இலாப வியாபாரிகளிடம் கமக்காரர்கள் ஏமாறக்கூடாது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக நடவடிக்கை.

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் தற்சமயம் பெரும்போக அறுவடை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கமக்காரர்கள் கொள்ளை இலாப வியாபாரிகளிடம் ஏமாந்துவிடாமல் தமது உழைப்பிற்கேற்ற வருமானத்தை பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றையதினம் காலை கிளிநொச்சியின் நெற்களஞ்சியமான முரசுமோட்டை பிரதேசத்திற்குச் சென்ற அமைச்சரவர்கள் கமக்காரர் அமைப்பு பிரதிநிதிகளைச் சந்தித்ததுடன் அவர்களது அறுவடை மற்றும் நெல் விற்பனை குறித்தும் கேட்டறிந்தார். கரைச்சி கமக்காரர்கள் அமைப்பின் செயலாளர் விஜயகுமார் தலைமையில் அங்கு சமூகமளித்த கமக்காரர் அமைப்பு பிரதிநிதிகள் இதுகுறித்து தெரிவிக்கையில் தற்சமயம் பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் போதிய களஞ்சிய வசதி இன்மையாலும் அவசர பணத்தேவை காரணமாகவும் வேறு வழியின்றி மொத்த வியாபாரிகளிடம் அறா விலைக்கு தமது நெல்லை விற்பனை செய்வதாக கவலையுடன் தெரிவித்தனர்.

இவ்விடயத்தில் உடனடியாகவே கூடிய கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாடுபட்டு வியர்வை சிந்தி உழைத்த கமக்காரர்கள் எவ்வகையிலும் நஷ்டமடையக் கூடாது எனத் தெரிவித்ததுடன் அரசாங்கத்தின் நெல் உத்தரவாத விலையான 28 ரூபாவிற்கு கரைச்சி ப.நோ.கூ.சங்கத்தின் அரிசி ஆலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கையளிக்கும்படி தெரிவித்தார்.

மேலும் கரைச்சி ப.நோ.கூ.சங்கத்தின் பொதுமுகாமையாளருடன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு பிரதேச நெற்செய்கையாளர்களின் அறுவடை நெல்லை உத்தரவாத விலைக்கு உடனடி பணம்கொடுத்து கொள்வனவு செய்யும்படியும் இதற்காக சங்கத்திற்கு தேவையான நிதியுதவி இலகுகடன் உள்ளிட்ட பல்வேறு வழிவகைகள் ஊடாக ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் தெரிவித்துக் கொண்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துரிதமாகச் செயற்பட்டு தமது உற்பத்திக்கேற்ற விலையினை பெற்றுத் தருவதற்காகவும் கொள்ளை இலாப வியாபாரிகளிமிருந்து தம்மைக் காப்பாற்றியதற்காகவும் கமக்காரர் அமைப்பு பிரதிநிதிகள் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’