வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 மார்ச், 2011

பிரதமர்கள் பார்த்த கிரிக்கெட்

லகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடிய ஆட்டத்தை இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் கண்டுகளித்துள்ளனர்.

இந்த ஆட்டம் முக்கியமானதொரு விளையாட்டு நிகழ்வு என்பதைத் தாண்டி முக்கியமான ஒரு ராஜீய நிகழ்வாகவும் அமைந்துள்ளது எனலாம்.
ஆட்டம் நடக்கும் அரங்கம் வந்த பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் யூஸுஃப் ரஸா கிலானியும் இரு அணி வீரர்களையும் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

ஆட்டம் துவங்குவதற்கு முன்பு இவ்விருவரும் சந்தித்து உரையாடி இருந்தனர்.

ஆட்டம் முடிந்த பின்னரும் இந்த இரு தலைவர்களும் இரு நாடுகள் இடையிலான உறவு குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இவ்விரு அண்டைகள் இடையிலான உறவு கடுமையான முறுகல் நிலையை அடைந்திருந்தது.
ஆனால் தற்போது இந்தியப் பிரதமரின் அழைப்பை ஏற்று இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பைத் தாக்குதல்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவது தொடர்பில் மற்ற நாட்டின் அதிகாரிகளை தமது நாட்டுக்குள் அனுமதிக்க இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டுமே நேற்று சம்மதம் தெரிவித்திருந்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’